சென்னையில் முழு பொதுமுடக்கம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்: பிரதீப் கவுர் 

கரோனா தொற்று அறிகுறி உள்ளோருக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டால் சென்னையில் முழு பொதுமுடக்கம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
சென்னையில் முழு பொதுமுடக்கம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்: பிரதீப் கவுர் 
Updated on
1 min read


கரோனா தொற்று அறிகுறி உள்ளோருக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டால் சென்னையில் முழு பொதுமுடக்கம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். 

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்து வருவது குறித்து, மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 15) ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் சில பகுதிகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா். இதன்படி முழு பொது முடக்கம், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதில், சில அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரா் ஊா்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சாா்ந்த சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியாா் வாகன உபயோகம் அனுமதி இல்லை.

இந்த நிலையில் கரோனா தொற்று அறிகுறி உள்ளோருக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டால் சென்னையில் முழு பொதுமுடக்கம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். 

மேலும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுப்பிரச்னை போன்ற தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். முன்கூட்டியே தனிமைப்படுத்துதல், கட்டாயம் முக்ககவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவை கரோனாவில் நம்மை காக்கும் என பிரதீப் கவுர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com