யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

தாரமங்கலம் மரக்கடையில் பயங்கர தீ விபத்து 

தாரமங்கலம் மரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Published On :

தாரமங்கலம் மரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஓமலூர் பிரதான சாலையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக மரக்கடை உள்ளிட்ட ஹார்டுவேர் பொருட்கள் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று விடியற்காலை சுமார் 3 மணியளவில் மரக்குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.

மரக்கடை என்பதால் தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த ஓமலூர் மற்றும் இரும்பாலை தீயணைப்புத்துறையினர் இரண்டு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கப் போராடினர். மேலும் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து தாரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் சுமார் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரம் உள்ளிட்ட ஹார்டுவேர் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீயணைப்புத்துறையினர் துரித முயற்சியால் மற்ற பகுதிக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.