வரத்து குறைவால் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை திடீர் உயர்வு
வரத்து குறைவால் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


வரத்து குறைவால் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஆந்திரா கர்நாடகா கிருஷ்ணகிரி தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவு விளைச்சல் கொண்டுவரப்பட்டு ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வரத்து அதிகரித்து காணப்பட்டதால் ஒரு ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது வரத்து குறைந்துள்ளதால் இன்று ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.40 விற்பனையானது. இதுகுறித்து தக்காளி வியாபாரி ஒருவர் கூறும்போது, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்தது. இதன் காரணமாக விலை குறைந்து காணப்பட்டது தற்போது கரோனா காரணமாக விவசாயிகள் தக்காளியை குறைந்த அளவே பயிரிட்டுள்ளனர்.
இதனால் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 40க்கு விற்பனையாகிறது. 15 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.450 க்கு விற்பனையாகிறது. தற்போது வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை மேலும் உயரக்கூடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...