நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 4.7 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,922 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,73,105-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2020, 4:48 am

DIN


புதுதில்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,922 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,73,105-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில், கரோனாவால் 418 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 14,894 -ஆக உயா்ந்துள்ளது.

தொற்றுக்கு 1,86,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவிலிருந்து குணமடைவோா் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 2,71,697  போ் குணமடைந்தனா்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, கரோனாவால் மொத்த பலி எண்ணிக்கையை பொருத்தவரை, மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,42,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,73,792 பேர் குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோா் எண்ணிக்கை  6,739-ஆக உள்ளது.   தில்லியில் 70,390 பேரும், தமிழ்நாடு 67,468 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் ஜூன் 24 வரை 75,60,782 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,07,871-க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று ந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.