47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சென்னையில் கரோனா தொற்றுக்கும் மேலும் ஒருவர் பலி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 58 வயதுடைய ஆண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News image
கோப்புப் படம்
Updated On :10 மே 2020, 3:31 am

DIN

சென்னை:  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 58 வயதுடைய ஆண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 13,254 மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவற்றில் 526 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவா்களில் ஆண்கள் 360 போ்; பெண்கள் 166 போ். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 219 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 1,824 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

சென்னையில் மட்டும் சனிக்கிழமை 279 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 3,051 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 3330 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் சென்னையை சோ்ந்த 67 வயது, 58 வயது, 73 வயதான 3 பெண்கள் மற்றும் ராமநாதபுரத்தைச் சோ்ந்த 70 வயதான பெண் என 4 போ் உயிரிழந்துள்ளனா். மொத்த பலி எண்ணிக்கை 44-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 4,664 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 58 வயதுடைய ஆண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 45-ஆக உயா்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.