ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆத்தூர் நகர காவல் ஆய்வாளரை முற்றுகை

ஆத்தூரில் சாலையோர வியாபாரியை தரைகுறைவாக பேசி எரிவாயு உருலையை எடுத்துச் சென்ற நகர காவல் ஆய்வாளரை செவ்வாய்க்கிழமை முற்றுக்கையிட்ட வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

News image
ஆய்வாளரை முற்றுக்கையிட்ட மக்கள்
Updated On :13 அக்டோபர் 2020, 4:30 pm

DIN

ஆத்தூரில் சாலையோர வியாபாரியை தரைகுறைவாக பேசி எரிவாயு உருலையை எடுத்துச் சென்ற நகர காவல் ஆய்வாளரை செவ்வாய்க்கிழமை முற்றுக்கையிட்ட வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் திமுக 9வது வார்டு கிளை செயலாளர் சூப்வேல்முருகன் (வயது 42) என்பவர் சூப் மற்றும் பிரியாணி கடை தள்ளுவண்டியில்  நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்தவாரம் நெடுஞ்சாலையில் தார்சாலை அமைந்ததால் அனைத்து சாலையோரக் கடைகளை அகற்றி விட்டு சாலை அமைத்தனர். இதனையடுத்து சாலையோரக் கடை வியாபாரிகள் மிகவும் பாதித்த நிலையில் இருந்தனர்.

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வியாபாரம் செய்யமுடியாத நிலையில் தள்ளப்பட்டனர். செவ்வாய்க்கிழமை மாலை வேல்முருகன் கடையை வைத்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆத்தூர் நகர் காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் வேல்முருகன் மற்றும் மனைவியை தரக்குறைவாக பேசியும் எரிவாயு உருளையை எடுத்துக்கொண்டு சென்றார்.

தகவல் அறிந்த திமுகவினர் மற்றும் நண்பர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோர்  திரண்டு ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும் சாலையோர வியாபாரிகள் தாங்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.