ஒடிசாவில் யானை தாக்கி இரண்டு பெண்கள் பலி

ஒடிசாவில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பெண்கள் பலியானதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒடிசாவில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பெண்கள் பலியானதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

மயூர்பஞ்ச் மாவட்டத்தின் போலஸ்முண்டலி கிராமத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்த 62 வயதான சுபத்ரா ராணா என்ற பெண்ணை அப்பகுதிக்கு வந்த காட்டு யானை சம்பவ இடத்திலேயே கொன்றது.

இதைத் தொடர்ந்து அருகிலுள்ள துக்பாலசியா கிராமத்திற்குச் சென்று பிரமிலா (45) மற்றும் இந்திரஜீத் மொஹந்தோ (32) ஆகிய இருவரையும் தாக்கியதாக, மொராடா காவல் நிலைய ஆய்வாளர் குனி பெஸ்ரா கூறினார்.

காயமடைந்த இருவரையும் பாரிபாடாவின் பிஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அந்த பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஜார்கண்டின் டால்மா வனவிலங்கு சரணாலயத்திலிருந்து தவறுதலாக இப்பகுதிக்கு வந்த யானை அதன் வாழ்விடத்திற்கு திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகள் எடுத்து வருவதாக ரஸ்கோவிந்த்பூர் வன வரம்பு அதிகாரி பிரசாந்த் குமார் பெஹெரா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com