மகாராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் பர்பானி மாவட்டத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் கோழிப் பண்ணை ஒன்றில் 900 கோழிகள் உயிரிழந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
மேலும், கோழிகள் இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அவற்றின் மாதிரிகள் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முல்கிகர் கூறினார்.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் மும்பை, தாணே, பர்பானி, ரத்னகிரி மற்றும் பீட் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டில், வடக்கு மகாராஷ்டிரத்தின் நந்தூர்பார் மற்றும் துலே மாவட்டங்களில் எச் 5 என் 1 வைரஸ் பாதிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பறவைகளை பாதிப்புக்குள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மிதுனம் - இன்றைய ராசி பலன் (02.07.2026)

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ. 95.23 ஆக நிறைவு!

மு.க. ஸ்டாலின் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடலாம்! அமைச்சர் நிர்மல் குமார் கடும் விமர்சனம்!

இது பீஸ்ட் மோட்... மெஸ்ஸி, எம்பாபே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்!
விடியோக்கள்

ஸ்டாலினுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா? அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்! | TVK | DMK

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS



