கரோனா: குஜராத் உயர்நீதிமன்றம் ஏப்.10 முதல் 14 வரை மூடல்
கரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து குஜராத் உயர்நீதிமன்றம் ஏப்ரல் 10 முதல் 14 வரை சுத்தகரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.


கரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து குஜராத் உயர்நீதிமன்றம் ஏப்ரல் 10 முதல் 14 வரை சுத்தகரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வருவதையடுத்து பல மாநிலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதனிடையே குஜராத் மாநிலத்திலும் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், குஜராத் உயர்நீதிமன்றம் சுத்தகரிப்பு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளுக்காக ஏப்ரல் 10 முதல் 14 வரை மூடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், நீதிமன்றத்தில் பதிவேடு அலுவலகம் ஏப்ரல் 12 வரை மூடப்படும் எனக் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...