இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கரோனாவுடன் போராடும் இந்தியாவுக்கு ஒத்துழைப்போம்: தென் கொரியா

கரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை தந்து ஒத்துழைப்போம் என தென் கொரியா தூதரகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2021, 10:28 am

ANI

கரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை தந்து ஒத்துழைப்போம் என தென் கொரியா தூதரகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3.60 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,293 போ் உயிரிழந்துள்ளனா். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன. 

இந்நிலையில் புதன்கிழமை தென் கொரியா தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

கரோனா தொற்றை எதிர்கொண்டு உயிர்களை காப்பாற்றும் வகையில் இந்தியாவுக்கு தேவையான மருத்துவ பொருள்களை தென் கொரியா அரசு வழங்க உள்ளது. ஆக்ஸிஜன் போன்ற தேவைப்படும் பொருள்கள் குறித்து இந்திய அரசிடம் ஆலோசனை நடத்தி வருகின்றோம். 

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு எங்களது அரசு தொடர்ந்து ஒத்துழைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.