/

தண்ணீருக்கு பதில் கிருமிநாசினியை குடித்த மும்பை மாநகராட்சி இணை ஆணையர்

தண்ணீருக்கு பதில் கிருமிநாசினியை மும்பை மாநகராட்சி இணை ஆணையர் ரமேஷ் பவார் புதன்கிழமை குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :3 பிப்ரவரி 2021, 10:54 am

ANI

தண்ணீருக்கு பதில் கிருமிநாசினியை மும்பை மாநகராட்சி இணை ஆணையர் ரமேஷ் பவார் புதன்கிழமை குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கள் செய்யும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பேசுவதற்கு முன் தண்ணீருக்கு பதிலாக மும்பை மாநகராட்சி இணை ரமேஷ் பவார் ஆணையர் கிருமிநாசினியை குடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரமேஷ் பவார் கூறுகையில்,

எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு நான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைத்தேன், அதனால் நான் பாட்டிலைத் எடுத்து குடித்தேன். அங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்களும் கிருமிநாசினியும் ஒரே மாதிரி இருந்தன.

நான் அதை குடித்தவுடனே தவறை உணர்ந்தேன். இதுபோன்ற சம்பவங்கள் தற்செயலாக நடப்பது இயல்பு என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.