பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேற்குவங்கம் ஊழலால் சுரண்டப்பட்டுள்ளது: நட்டா

மம்தா அரசின் ஊழலால் மேற்குவங்கத்தின் கலாச்சாரம், வளர்ச்சி உள்ளிட்டவை சுரண்டப்பட்டுள்ளது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

News image
பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா(கோப்புப்படம்)
Updated On :9 பிப்ரவரி 2021, 10:16 am

ANI

மம்தா அரசின் ஊழலால் மேற்குவங்கத்தின் கலாச்சாரம், வளர்ச்சி உள்ளிட்டவை சுரண்டப்பட்டுள்ளது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக சார்பில் தேர்தலை முன்னிட்டு ‘மாற்றத்திற்கான பேரணி’ இன்று பிர்பூமில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்தப் பேரணியை துவக்கி வைத்த நட்டா பேசுகையில்,

கலாச்சாரம், வளர்ச்சி மற்றும் நாட்டிற்கான வழிகாட்டியாக அறியப்பட்ட மேற்குவங்கம், தற்போது மம்தா அரசாங்கத்தால் ஊழல் மூலம் சுரண்டப்பட்டுள்ளது. அதனால் உண்மையான மாற்றத்திற்கான பேரணியை தொடங்க பாஜக முடிவெடுத்துள்ளது என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.