ம.பி.யில் பேருந்து விபத்து: ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சீதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சட்னாவுக்குச் செல்லும் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் தவறி விழுந்தது. இந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் பிரமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க மோடி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...