எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ம.பி. விபத்தில் பலியான 45 பேரின் சடலங்கள் மீட்பு: முதல்வர்

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்தில் பலியான 45 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக மாநில முதல்வர் சிவராஜ் செளகான் தெரிவித்துள்ளார். 

News image
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் (கோப்புக்காட்சி)
Updated On :16 பிப்ரவரி 2021, 12:53 pm

ANI

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்தில் பலியான 45 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார். 

சீதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சட்னாவுக்குச் செல்லும் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் தவறி விழுந்தது. இதில் உயிரிழந்தோரின் சடலங்களை மீட்கும் பணி காலை முதல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பலியான அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் சிவராஜ் செளகான் கூறுகையில்,

மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ. 10,000 உடனடியாக தர உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்குமுன், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.