டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சேலத்தில் காவலர்களுக்கு சீருடையில் பொருத்தும் கேமிரா வழங்கல்

சேலத்தில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு  சீருடையில் வைத்து கண்காணிக்கும் கேமிரா செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image
சேலம் மாநகர காவல்துறையில் பணிபுரியும் 27 காவலர்களுக்கு சீருடையில் அணியும் கேமிராக்களை செவ்வாய்க்கிழமை வழங்கும் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார்.
Updated On :23 பிப்ரவரி 2021, 1:42 pm

DIN

சேலத்தில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு  சீருடையில் வைத்து கண்காணிக்கும் கேமிரா செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

சேலத்தில் பணியாற்றும் காவலர்கள் ரோந்து செல்லும் போது சீருடையில் வைத்து கண்காணிக்க ‘பாடி வொர்ன் கேமிரா’ இன்று காலை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனை வழங்கிய சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் பேசியதாவது,

இந்த நவீன கேமராவை ரோந்து  செல்லும்போது கட்டாயம் காவலர்கள் எடுத்துச் செல்லவேண்டும். இதை பயன்படுத்தாமல் விட்டுவிட கூடாது.

ரோந்து செல்லும் போது யாரும் குடிபோதையில் தகராறு செய்தாலோ அல்லது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்போதோ  இந்த கேமிரா மூலம் அந்த காட்சிகளை பதிவு செய்து  கொள்ள வேண்டும்.

அவ்வாறு கேமிராவில் பதிவு செய்யப்படும் காட்சிகள் நீதிமன்றத்தில்  காட்ட பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.