சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து, கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று இரண்டு சம்பவங்களில் கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட செய்தியில்,

துபை செல்லும் பயணிகளை சோதனை செய்ததில், 3 பேரிடம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 21.39 லட்சம் ஆகும்.

மற்றொரு சம்பவத்தில், துபையிலிருந்து வந்த பயணியை சோதனையிட்டதில், ரூ. 11.25 லட்சம் மதிப்பிலான 220 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com