மூன்றாம் கட்ட சோதனையில் உள்ள கோவேக்சின் தடுப்பூசியை சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்துவதற்கு கர்நாடக மருத்துவர்கள் சங்கம்(கே.ஏ.ஆர்.டி.) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தும் முதற்கட்டப் பணி கடந்த 4 நாள்களாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், கர்நாடகத்தில் மருத்துவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு கர்நாடக மருத்துவர்கள் சங்கம்(கே.ஏ.ஆர்.டி.) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மருத்துவர்கள் சங்க(கே.ஏ.ஆர்.டி.) தலைவர் கூறுகையில்,
கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவேக்சின் இன்னும் மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ளது. இருப்பினும் கர்நாடகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது.
எந்த தடுப்பூசி போட வேண்டும் என்று சுகாதாரப் பணியாளர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறினார்.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து!

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு

தேர்தல் 1962! கடைசியாக காங்கிரஸ் பெற்ற வெற்றி!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

