தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: பிரதமர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :1 ஜூன் 2021, 12:41 pm

DIN

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தோ்வை ரத்து செய்தும், மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் 2 தோ்வுகளை ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஓரிரு நாள்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ராஜ்நாத் சிங், அமித் ஷா, மத்திய கல்வி செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.