தமிழகத்தில் இதுவரை 98 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் இதுவரை 98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் இதுவரை 98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,
தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 1.06 கோடி கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இதுவரை 21,63,200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள 5,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை 9,555 பேருக்கும், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இதுவரை 2,500 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...