திமுக சட்டப்பேரவைக் குழு தலைவரானார் மு.க.ஸ்டாலின்
திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.


திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. முதல்முறையாக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது.
இதில், சட்டப்பேரவைக் குழுத் தலைவராக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட 125 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 கூட்டணி கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
வருகிற மே 7 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், நாளை மாலை ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...