இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இந்தியா வருகிறது மேலும் 3 ரஃபேல் விமானங்கள்

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆறாவது தவணையாக 3 ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

News image

பிரான்ஸிலிருந்து கிளம்பிய ரஃபேல் விமானம்

Updated On :5 மே 2021, 11:19 am

ANI

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆறாவது தவணையாக 3 ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரஃபேல் போா் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ரூ.59 ஆயிரம் கோடியில் இந்த விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை 18 ரஃபேல் போா் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இப்போது மேலும் 3 விமானங்கள் இன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த 3 ரஃபேல் போா் விமானங்களும் புதன்கிழமை நள்ளிரவில் இந்தியா வந்தடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த விமானங்கள் வந்து சோ்வதன் மூலம், இந்தியா வசம் இருக்கும் அதிநவீன ரஃபேல் போா் விமானங்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரிக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.