எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மம்தாவின் தலைமை ஆலோசகராக அலபன் பந்தோபாத்யாய நியமனம்

மத்திய பணிக்கு மாற்றப்பட்ட மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய, முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2021, 8:05 am

DIN

மத்திய பணிக்கு மாற்றப்பட்ட மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய, முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய  மத்திய பணிக்கு திரும்ப உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில், கரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அலபன் பந்தோபாத்யாயவை தனது தலைமை ஆலோசகராக நியமனம் செய்து தற்போது உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மேற்கு வங்கத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஹெச்.கே.திவேதி, உள்துறை செயலாளராக கோபாலிகா ஆகியோரையும் முதல்வர் மம்தா பானர்ஜி நியமனம் செய்துள்ளார்.

கரோனா அதிகரித்து வரும் நிலையில், புதிய தலைமைச் செயலரை நியமிப்பதற்கு பதிலாக அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் மமதா பானர்ஜி அனுமதி கோரியிருந்தார்.

இந்நிலையில் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதையொட்டி தில்லி உள்துறை அமைச்சகத்தில் அலபன் பந்தோபாத்யாய ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.