மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டையில் முதல்வர் மு. க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் 69-வது பிறந்த நாள் விழாவை இன்று திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

News image
Updated On :1 மார்ச் 2022, 4:41 am

DIN

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் 69-வது பிறந்த நாள் விழாவை இன்று திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான, மு. க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் திமுக சுற்றுச்சூழல் மாநில துணை செயலாளர் வினோத் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மரக்கன்றுகள் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். 

இதில் நகர, ஒன்றிய, பேரூராட்சி திமுக நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.