அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சீர்காழி நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த துர்கா பரமேஸ்வரி போட்டியின்றி தேர்வு

சீர்காழி நகர்மன்றத் தலைவர் தேர்தல் நகர மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. நகராட்சியில் உள்ள 24 வார்டு உறுப்பினர்களின்

News image
Updated On :4 மார்ச் 2022, 7:56 am

DIN

சீர்காழி:சீர்காழி நகர்மன்றத் தலைவர் தேர்தல் நகர மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. நகராட்சியில் உள்ள 24 வார்டு உறுப்பினர்களின் 21வது வார்டு உறுப்பினர் முழுமதி தவிர மற்ற அனைவரும் தேர்தலில் பங்கேற்றனர். திமுக சார்பில் துர்கா பரமேஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Story image

அவரை திமுக நகர்மன்ற உறுப்பினரான பாஸ்கரன் முன்மொழிந்தார். அதேபோல் தேமுதிக நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகரன் வழிமொழிந்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் துர்கா பரமேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்ட துர்கா பரமேஸ்வரிக்கு  சீர்காழி  நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இப்ராகிம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

அருகில் மேலாளர் காதர் கான், பணி தள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். புதிதாக பதவியேற்ற நகர்மன்றத் தலைவருக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர்  வாத்திய முழக்கத்துடன் ஊர்வலமாக சென்று பெரியார், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.