அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மானாமதுரை நகர்மன்றத் தலைவர், திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

News image
மானாமதுரை நகர்மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட எஸ்.மாரியப்பன் கென்னடிக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
Updated On :4 மார்ச் 2022, 7:55 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி திருப்புவனம், இளையான்குடி பேரூராட்சித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

இளையான்குடி பேரூராட்சி மன்றத் தலைவராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட செய்யது ஜெசிமாவுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

இளையான்குடி பேரூராட்சி மன்றத் தலைவராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட செய்யது ஜெசிமாவுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

மானாமதுரை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் அதிமுக 14 இடங்களில் வென்று நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. 

மேலும் பல சுயேச்சைகள் திமுகவை ஆதரிக்கின்றனர். இந்நிலையில் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாரியப்பன் கென்னடி நகர்மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக தரப்பில் யாரும் போட்டியிடாததால் மாரியப்பன் கென்னடி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையாளர் கண்ணன் தெரிவித்தார். 

திருப்புவனம் பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட த.சேங்கைமாறனுக்கு கட்சியினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

திருப்புவனம் பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட த.சேங்கைமாறனுக்கு கட்சியினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மாரியப்பன் கென்னடிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இதேபோல் திருப்புவனம் பேரூராட்சி மன்றத்தின் தலைவராக திமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் த.சேங்கைமாறன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இவருக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். 

இளையான்குடியில் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த செய்யது ஜெமிமா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.