அண்ணாமலை மன்னிப்பு கேட்கக் கோரி திமுக நோட்டீஸ்

திமுகவினர் சொத்து பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்கக் கோரி அக்கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
அண்ணாமலை மன்னிப்பு கேட்கக் கோரி திமுக நோட்டீஸ்

திமுகவினர் சொத்து பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்கக் கோரி அக்கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அதில், திமுக பைல்ஸ் என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் விடியோவில் நீங்கள் திமுக கட்சி மீது பல தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தீர்கள். திமுகவின் சில சொத்துகளின் மதிப்பை உயர்த்தி, தொடர்பில்லாத சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலம் திமுக கட்சிக்கு மொத்தம் ரூ.1408.94 கோடி சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் திமுகவின் சொத்துகள் மற்றும் கடன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அத்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். புகாரில் தெரிவித்தது போல் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. சொத்து பட்டியல் வெளியீடு தொடர்பாக இணையதளத்தில் வெளியிட்ட விடியோவை நீக்க வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும். குற்றச்சாட்டுகளுக்கு இழப்பீடாக ரூ.500 கோடியை தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக அமைச்சா்கள், நிா்வாகிகளின் சொத்து, ஊழல் பட்டியல் ஏப். 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்தப் பட்டியலை அவர் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com