தொடரும் மழை..! அரையிறுதிப் போட்டி நடைபெறுமா..?
இந்திய அணி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வெளியிட்ட விடியோ..


இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2 ஆவது அரையிறுதிப் போட்டி நடைபெறும் கயானா மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2 ஆவது அரையிறுதிப் போட்டி 88 சதவீதம் மழையால் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டி முழுமையாக மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
மேலும், கயானா மைதானத்தில் போட்டி வர்ணனையாளராக உள்ள இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் தினேஷ் கார்த்திக் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோப் பதிவில், “நிலைமை தற்போது சரியாக இல்லை. ஒரு மோசமான செய்தியுடன் தொடங்கினேன். இப்போது நல்ல செய்தியுடன் தொடங்குகிறேன். சூரியன் வெளிவர தொடங்கியுள்ளது. மழையும் குறைந்துள்ளது. மைதானத்தில் மூடப்பட்டிருந்த கவர்கள் நீக்கப்பட்டுவிட்டன” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...