ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

பிரதமர் மோடியின் ஊடக விவகாரங்களைக் கவனிப்பவர்களில் ஒருவர் எனக் கூறப்படும் நிலையில் அபய் ஓஜா விலகியுள்ளார்.
ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

 ஜீ மீடியா கார்ப்பரேஷன் (ஜீ நியூஸ்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அபய் ஓஜா பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார்.

கடந்த சனிக்கிழமை பிற்பகலுடன் நிறுவனத்தில் அவருடைய பணிகள் முடிவுக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓஜாவின் பதவி விலகல் தொடர்பாக, மே 4 ஆம் தேதி மின்னஞ்சல் வழி பணியாளர்களுக்கு ஜீ மீடியா நிறுவனம் தகவல் தெரிவித்தது. இவருக்குப் பதிலாக இடைக்கால ஏற்பாடாக இத்ரிஸ் லோயா பொறுப்பேற்றுள்ளார்.

2023 பிப்ரவரியில் ஜீ மீடியாவில் இணைந்த அபய் ஓஜா, இதற்கு முன் ஸ்டார் டிவி, இன்டஸ்இந்த் மீடியா போன்றவற்றில் பதவி வகித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஊடக விவகாரங்களைக் கவனித்துக் கொள்வதில்  மோடியின் வலது கரம் போன்றவர் இவர் என்று கூறப்படுகிறது. இவருடைய திடீர் விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவருடன் சேர்த்து மேலும் சிலரை ராஜிநாமா செய்யுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிவருகின்றன.

இதனிடையே, மே 4 ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில் ஜீ மீடியாவின் சுபாஷ் சந்திர, ‘ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிப்பதிலும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதிலும் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாப்பதிலும் சுதந்திரமான ஊடக உலகின் ஆற்றலைக் கொண்டாடுவோம். ஊடகத் தொழிலின் ஒருங்கிணைந்த பகுதியாக, உண்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றில் உலகிலுள்ள அனைத்து பத்திரிகையாளர்களில் ஒருவனாக உடன் நிற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com