கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சிறப்புச் செய்திகள்

அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
Updated On :22 ஜூலை 2025, 11:20 am
7:08 am, 31 ஆகஸ்ட் 2020

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

7:08 am, 31 ஆகஸ்ட் 2020

சென்னையில் 88% பேர் கரோனாவில் இருந்து குணமடைந்தனர்

 சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர். 13,472 பேர் அதாவது 10% பேர் சிகிச்சையில் உள்ளனர். விரிவான செய்திக்கு..

12:43 am, 31 ஆகஸ்ட் 2020

தமிழகத்தில் புதிதாக 5,956 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் புதிதாக 5,956 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
9:08 pm, 30 ஆகஸ்ட் 2020

ரஷியாவில் புதிதாக 4,993 பேருக்கு தொற்று; பாதிப்பு 9,95,319 ஆக உயர்வு

ரஷியாவில் புதிதாக 4,993 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 83 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

9:07 pm, 30 ஆகஸ்ட் 2020

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமித் ஷா

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை காலை வீடு திரும்பினார். விரிவான செய்திக்கு..

 
9:07 pm, 30 ஆகஸ்ட் 2020

நாட்டில் புதிதாக 78,512 பேருக்கு கரோனா; மேலும் 971 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,512 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 971 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 
9:06 pm, 30 ஆகஸ்ட் 2020

அமெரிக்காவில் மேலும் 46,739 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 971 பேர் பலி

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,95,102 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

9:03 pm, 30 ஆகஸ்ட் 2020

உலகம் முழுவதும் கரோனா பலி எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்தது!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்துள்ளது. விரிவான செய்திக்கு..

 
 
7:22 am, 30 ஆகஸ்ட் 2020

சென்னையில் 2,712 பேர் கரோனாவுக்குப் பலி: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,653 ஆக உள்ளது. இதுவரை 1,33,173 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,712 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 
4:44 am, 30 ஆகஸ்ட் 2020

இந்தியாவில் புதிதாக 78,761 பேருக்கு கரோனா; மேலும் 948 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 948 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 
4:28 am, 30 ஆகஸ்ட் 2020

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தை நெருங்குகிறது!

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 59,48,426 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

4:03 am, 30 ஆகஸ்ட் 2020

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,246 பேருக்கு கரோனா

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 5,246 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக.30) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு.. 

4:00 am, 30 ஆகஸ்ட் 2020

தமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கரோனா: மேலும் 94 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 6,495 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக.30) உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

3:09 am, 30 ஆகஸ்ட் 2020

உலக அளவில் கரோனா பாதிப்பு 2.51 கோடியைத் தாண்டியது!

உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2.51 கோடியைத் தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி 2,51,63,150 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 8,46,734 ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..

 
6:57 am, 29 ஆகஸ்ட் 2020

தமிழகத்தில் இதுவரை 45 லட்சம் கரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி

 கரோனா பேரிடரைக் கையாளும் வகையில் சுமார் 15 ஆயிரம் பேர் கூடுதலாக சுகாதாரத்  துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர், தமிழகத்தில் இதுவரை 45 லட்சம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..

6:57 am, 29 ஆகஸ்ட் 2020

'அறிகுறி இல்லாதவர்களிடமிருந்தே கரோனா அதிகம் பரவுகிறது'

 அறிகுறி இருப்பவர்களை விடவும், அறிகுறியே இல்லாத நோயாளிகள்தான் மிகப்பயங்கர தொற்றைப் பரப்புபவர்களாக இருப்பதாகவும், அதனால்தான் கரோனா இந்த அளவுக்கு வேகமாகப் பரவி வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..

4:25 am, 29 ஆகஸ்ட் 2020

உலகளவில் 2.50 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு

 உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்குகிறது. இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.41 லட்சமாக உள்ளது. விரிவான செய்திக்கு..

4:25 am, 29 ஆகஸ்ட் 2020

உலகளவில் 2.50 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு

 உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்குகிறது. இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.41 லட்சமாக உள்ளது. விரிவான செய்திக்கு..

4:24 am, 29 ஆகஸ்ட் 2020

ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கரோனா தொற்று

 அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜெகத்ரட்சகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

1:14 am, 29 ஆகஸ்ட் 2020

சென்னையில் 1,285 பேருக்குத் தொற்று: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

 சென்னையில் இன்று 1,285 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

1:12 am, 29 ஆகஸ்ட் 2020

தமிழகத்தில் இன்று புதிதாக 6,352 பேருக்கு கரோனா: மேலும் 87 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக. 29, சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.