
சிறப்புச் செய்திகள்
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
சென்னையில் 5 மண்டலங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 12,929 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு
கேரளத்தில் புதிதாக 10,606 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,447 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,447 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் மேலும் 2,871 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,871 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் புதிதாக 11,115 பேருக்குத் தொற்று; மேலும் 202 பேர் பலி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,115 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 202 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்வு
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்ந்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 72,049 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் ஒரேநோளில் 61,267 பேருக்கு கரோனா; 884 போ் பலி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 61,267 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் 5,795, கர்நாடகத்தில் 9,993 பேருக்கு கரோனா
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..
சென்னையில் மேலும் 1,036 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) 3,711 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கரோனா; 5,548 பேர் குணம்
தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 71 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவத் தொடங்கிய பிறகு, 39வது நாளாக தொடர்ந்து ஆறு ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 42 ஆக அதிகரிப்பு
சென்னையில் கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் இடங்களின் எண்ணிக்கை 36-ல் இருந்து 42- ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 42 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு..
இலங்கையில் மீண்டும் கரோனா பரவல்: 81 பேருக்கு பாதிப்பு
இலங்கையில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 33% பேருக்கு கரோனா எதிா்ப்பாற்றல்
கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் சென்னையில் 33 சதவீதம் பேருக்கு உருவாகியிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா பாதிப்புக்கு தற்போது 6.19 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆளாகியுள்ளனா். அதிகபட்சமாக தலைநகா் சென்னையில்தான் 1.72 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3,274 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதேபோன்று பிற மாவட்டங்களிலும் பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நோய்த் தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோருக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதனால், கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருக்கலாம் என கருதப்படுவதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலானது அதுகுறித்த ஆய்வை முன்னெடுப்பதாகத் தெரிவித்தது.
முன்னாள் மத்திய இணையமைச்சருக்கு கரோனா தொற்று
நாமக்கல்: நாமக்கல்லைச் சோ்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ.காந்திசெல்வனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009- 2014 இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நாமக்கல்லைச் சோ்ந்த செ.காந்திசெல்வன் சுகாதாரத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தாா். திமுகவைச் சோ்ந்த இவா் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தாா்.
இந்தியாவில் 66 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 66 லட்சத்தைக் கடந்துள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது: திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 74,442 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 66,23,816 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 903 போ் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,02,685 ஆக உயா்ந்துவிட்டது. கரோனாவில் இருந்து இதுவரை 55,86,704 போ் குணமடைந்துள்ளனா்.
தில்லியில் புதிதாக 1,947 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,947 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் புதிதாக 5,042 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,042 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,028 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,028 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,395 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,395 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் மீண்டும் 10 ஆயிரத்தைக் கடந்தது ஒருநாள் பாதிப்பு!
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,888 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 117 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

