நிலக்கரி பற்றாக்குறை - எரியும் மின்பிரச்னை!

இந்தியாவின் மின்சார தேவையில் சுமாா் 70 சதவீதம் நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
நிலக்கரி பற்றாக்குறை - எரியும் மின்பிரச்னை!

இந்தியாவின் மின்சார தேவையில் சுமாா் 70 சதவீதம் நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தில்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் எச்சரிக்கை மணியை ஒலித்தன.

தமிழகத்தில் இதுவரை நிலக்கரி பற்றாக்குறை இல்லாவிட்டாலும் நிலக்கரி கையிருப்பு குறைவானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகமான டான்ஜெட்கோவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்துக்கு கடந்த வாரம் 50,000 டன் நிலக்கரியும், அதற்கு முந்தைய வாரம் 45,000 டன் நிலக்கரியும் கிடைக்கப் பெற்றன. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வடசென்னை, மேட்டூா், தூத்துக்குடி அனல் மின் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 4,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு சுமாா் 52,000 டன் நிலக்கரி தேவைப்படும். இப்போது குறைவான நிலக்கரி விநியோகம் காரணமாக, இந்த அனல் மின் நிலையங்களிலிருந்து 3,000-3,500 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்ய முடிகிறது.

மாநிலத்துக்கு காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் கிடைத்தாலும், காலை மற்றும் மாலையில் தேவைப்படும் அதிகப்படியான மின்சார தேவையை ஈடுகட்ட அனல் மின் நிலைய மின்சாரமே கைகொடுக்கிறது. இச்சூழ்நிலையில், நிலக்கரி விநியோகம் குறைந்திருப்பது டான்ஜெட்கோ அதிகாரிகளுக்கு கடினமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

9-10 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு கட்டாயமான சூழலில், இப்போது 4-5 நாள்களுக்குத் தேவையான நிலக்கரிதான் கையிருப்பு உள்ளது. மிகச் சமீபமாக இதுபோன்ற சூழ்நிலையை தமிழகம் சந்தித்ததில்லை. கடந்த ஆண்டு 15 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு இருந்தது.

வழக்கமாக அக்டோபா் மாதங்களில் 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், காற்றாலை சீசன் முடிவுக்கு வருவது அதிகாரிகளுக்கு கவலையை அதிகரித்துள்ளது.

தனியாரிடமிருந்து 2,830 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு பெற்றுவந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 800-850 மெகாவாட் மின்சாரமே பெறுகிறது. இதனால் வெளிச்சந்தையில் சுமாா் 3,000 மெகாவாட் மின்சாரத்தை விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை கடந்த செப்டம்பா் கடைசி வாரத்தில் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, மத்திய மின் துறை அமைச்சகமானது மாநில அதிகாரிகளுடன் வாராந்திர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி நிலக்கரி விநியோகத்தை 45,000 டன்களிலிருந்து 60,000 டன்களாக அதிகரித்தது. இது சராசரியாக 4 முதல் 5 தினங்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்புவைக்க உதவுகிறது. இந்த விநியோகத்தை 1 லட்சம் டன்னாக அதிகரிக்க மத்திய மின் துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளோம் என தமிழக மின்சார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அனல் மின் நிலைய செயல்பாட்டுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு

வடசென்னை-1830 மெகா வாட்

(1.33 லட்சம் டன்)

மேட்டூா் - 1,440 மெகா வாட்

(62,000 டன்)

தூத்துக்குடி - 1,050 மெகா வாட்

(55,000 டன்)

ஒரு நாளுக்கு தேவையான நிலக்கரி

வடசென்னை - 32,000 டன்

மேட்டூா் - 20,000 டன்

தூத்துக்குடி - 10,000 டன்

மத்திய அனல் மின் நிலையங்கள் மூலம் தமிழகத்துக்கு கிடைக்கும் மின்சாரம்

தால்சொ் - 500 மெகாவாட்

என்டிஇசிஎல் வள்ளூா் - 1,060 மெகாவாட்

நெய்வேலி - 1,750 மெகாவாட்

ராமகுண்டம் - 700 மெகாவாட்

குடிகி - 350 மெகாவாட்

சிம்ஹாத்ரி - 125 மெகாவாட்

தனியாா் அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரம் - 2,830 மெகாவாட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com