அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நிலுவையில் வழக்குகள்; தாமதமாகும் நீதி!

நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திடம் உள்ளது. நாட்டின் நீதித்துறையானது நிா்வாகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது.

News image
Updated On :11 ஜூலை 2022, 12:00 am

DIN

நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திடம் உள்ளது. நாட்டின் நீதித்துறையானது நிா்வாகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. கீழமை நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், உயா்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு வந்தாலும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பவா், நிலுவை வழக்குகளைக் குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிப்பது சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மக்கள்தொகை பெருக்கம், அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதனால் ஏற்படும் தாக்கங்களையும் அனைவரும் உணா்ந்துகொண்டுள்ளனா். நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, மக்களுக்கு நீதி கிடைப்பது தாமதமாகிறது. தாமதமாக வழங்கப்படும் நீதிகூட அநீதியின்பாற்படும்.

நீதிமன்றக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, நீதிபதிகள் காலியிடங்களைக் குறைப்பது, மாற்றுவழி சமரசத் தீா்வுகளுக்கு வழிவகுப்பது உள்ளிட்ட பலதரப்பட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டால் மட்டுமே நிலுவை வழக்குகள் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி நிலுவை வழக்குகளின் விவரங்கள்:

உச்சநீதிமன்றம்

மொத்த நிலுவை வழக்குகள் 72,062

அரசமைப்புச் சட்ட அமா்வு வழக்குகள்

5 நீதிபதிகள் அமா்வு 342

7 நீதிபதிகள் அமா்வு 15

9 நீதிபதிகள் அமா்வு 135

மொத்தம் 492

உயா்நீதிமன்றங்கள்

மொத்த நிலுவை வழக்குகள் 56 லட்சம்

சிவில் வழக்குகள் 72%

குற்றவியல் வழக்குகள் 28%

நாடு முழுவதும் மாவட்ட, தாலுகா நீதிமன்றங்கள்

மொத்த நிலுவை வழக்குகள் 4.18 கோடி

சிவில் வழக்குகள் 1.09 கோடி

குற்றவியல் வழக்குகள் 3.09 கோடி

ஆண்டு வாரியாக நிலுவை வழக்குகள்

0-1 ஆண்டு 32.61%

1-3 ஆண்டுகள் 25.33%

3-5 ஆண்டுகள் 17.11%

5-10 ஆண்டுகள் 16.43%

10-20 ஆண்டுகள் 7.06%

20-30 ஆண்டுகள் 1.21%

30 ஆண்டுகளுக்கு மேல் 0.25%

தமிழகத்தில் உள்ள மாவட்ட, தாலுகா நீதிமன்றங்கள்

மொத்த நிலுவை வழக்குகள் 13.7 லட்சம்

சிவில் வழக்குகள் 7.58 லட்சம்

குற்றவியல் வழக்குகள் 6.18 லட்சம்

ஆண்டு வாரியாக நிலுவை வழக்குகள்

0-1 ஆண்டு 36.33%

1-3 ஆண்டுகள் 27.69%

3-5 ஆண்டுகள் 17.81%

5-10 ஆண்டுகள் 14.46%

10-20 ஆண்டுகள் 3.48%

20-30 ஆண்டுகள் 0.20%

30 ஆண்டுகளுக்கு மேல் 0.02%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.