சென்னையில் அடிப்படை வசதியற்ற குடிசைப்பகுதிகள் அதிகரிப்பு

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கடந்த 2014 முதல் 2018 க்கு இடையில் குடிசைப்பகுதிகள் 91% அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்னையில் அதிகரித்த குடிசைப்பகுதிகள்! 
சென்னையில் அதிகரித்த குடிசைப்பகுதிகள்! 


சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கடந்த 2014 முதல் 2018 க்கு இடையில் அடிப்படைவசதிகள் அற்ற குடிசைப்பகுதிகள் 91% அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், இந்தக் காலக்கட்டத்தில் சென்னை உள்ளிட்ட 3 நகரங்களில் 378 ஆக இருந்த குடிசைப் பகுதிகள் 616 ஆக அதிரித்திருப்பதாகவும், இது ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 62.9 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்திருக்கும் குடிசைப் பகுதிகளில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 65.95% அதிகரித்து, அதே காலகட்டத்தில் 77,671 இல் இருந்து 1,28,893 குடும்பங்களாக அதிகரித்துள்ளது. 91.9 சதவீதத்துடன், மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையில்தான் மிக அதிகமான குடிசைப்பகுதிகள் அதிகரித்துள்ளன.

பொதுவாக குடியிருக்கக்கூடிய குடிசைப்பகுதிகள், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மற்றும் குடியிருப்பு பயன்பாட்டிற்கு ஏற்ற ஆட்சேபனையற்ற நிலங்களில் அமைந்திருக்கும். ஆனால், ஏற்றுக்கொள்ள முடியாத குடிசைப் பகுதிகள் என வகைப்படுத்தப்பட்டவை, ஆரோக்கியமற்ற சூழலில் அமைந்திருக்கும், மற்றும் அங்கு மக்கள் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2016 முதல் 2022 வரை மாநில அரசு, 44 குடிசைப் பகுதிகளை அகற்றி, அப்பகுதிகளில் மீண்டும் ஆக்ரமிப்புகள் நடைபெறாதவண்ணம் தடுக்க தடுப்பு வேலிகளை அமைத்திருந்தது. அதேநேரத்தில் 2005 முதல் 2021ஆம் ஆண்டு முதல் வேளச்சேரியின் சதுப்பு நிலப்பகுதிகளில் ஏராளமான நிலப்பரப்புகள் ஆக்ரமிக்கப்பட்டு குடிசைகளாகவும், குடியிருப்புகளாகவும் மாறின. கோவிலம்பாக்கம் ஏரிப் பகுதியிலும் 2002ஆம் ஆண்டு முதல் ஆக்ரமிப்புகள் நடந்தேறிவருகின்றன.

2015ஆம் ஆண்டு முதல், ஏறக்குறைய 85 'ஆட்சேபனைக்குரிய' குடிசைப்பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன, எனவே 'அனுமதிக்க முடியாத' குடிசைப்பகுதிகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும்.  இந்த செயல்திட்டமானது, தமிழ்நாடு பகுதிகள் (மேம்பாடு மற்றும் அனுமதி) சட்டம், 1971ன் படி குடிசைப்பகுதிகளின் எண்ணிக்கை  'அறிவிப்பு' நிலையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

இவை, மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஆட்சேபனைக்குரியது' அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதது' போன்ற அண்மையில் உருவான வரையறைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படவில்லை என்பதுவும் இதற்குக் காரணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com