மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகளின் பொதுவான நிலவரம் பற்றி...
கரக்பூரில் வாக்களிக்க நிற்கும் வாக்காளர்கள்...
கரக்பூரில் வாக்களிக்க நிற்கும் வாக்காளர்கள்...

நாட்டில் புதிய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப் பதிவு, மே 25 சனிக்கிழமை, 58 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றிருக்கிறது.

ஏறத்தாழ பெரும்பாலான தொகுதிகளில் ஐந்து கட்டங்களில் வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையில் மே 25, ஜூன் 1 ஆம் தேதிகளில்தான் இரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் மீதியிருந்தன.

கரக்பூரில் வாக்களிக்க நிற்கும் வாக்காளர்கள்...
தலைநகர் தில்லி யார் பக்கம்? - வெற்றி தொடருமா? கூட்டணி வெல்லுமா?

மிக முக்கியமாக மே 25-ல் தலைநகர் தில்லியிலும் அருகிலுள்ள ஹரியாணாவிலும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற பெரும்பாலான இடங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகளிலும் அதிக அளவிலான தொகுதிகள், 45 தொகுதிகள், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வசம் இருப்பவைதான்.

கரக்பூரில் வாக்களிக்க நிற்கும் வாக்காளர்கள்...
ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஹரியாணாவில் இருக்கும் 10 தொகுதிகளும் உத்தரப் பிரதேசத்தில் 14-ல் 9 தொகுதிகளும் பிகாரில் 8 தொகுதிகளும் தில்லியிலுள்ள 7 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 8-ல் 5 தொகுதிகளும் ஜார்க்கண்டிலுள்ள 4 தொகுதிகளும் ஒடிசாவில் 6-ல் 2 தொகுதிகளும் தற்போது இந்தக் கூட்டணியிடம்தான் இருக்கின்றன.

ஒடிசாவில் இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த இந்தக் கூட்டணி, இந்த முறை கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன சமாஜ் வெற்றி பெற்றிருக்கும் 4 தொகுதிகளையும் கைப்பற்ற முடியும் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நம்புகிறது. ஏனெனில், உத்தரப் பிரதேசத்தில் இந்த முறை பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடுகிறது.

கரக்பூரில் வாக்களிக்க நிற்கும் வாக்காளர்கள்...
பாரதிய ஜனதா பூமி உ.பி.யில் மக்களுடன்! சமாஜவாதி – காங்கிரஸ் பாணி!

உத்தரப் பிரதேசத்தில் நிலைமை முழு அளவில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும் என்றே தேர்தல் அறிவிக்கப்படும் முன் வரை கருதப்பட்டுவந்தது. எனினும், தேர்தல் அறிவிப்புக்குப் பின், குறிப்பாக, இரண்டு கட்ட வாக்குப் பதிவுகளுக்குப் பின், நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கூட்டணிக் கட்சியான சமாஜவாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு அதிக அளவில் கூட்டம் திரள்வதும் குறிப்பிடத் தக்கது. மாநிலத்தில் இன்னும் ஏழாவது கட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 13 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற வேண்டியுள்ளது.

மே 25-ல் வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகளில், வழக்கம்போல, இந்தியா கூட்டணியின் வசமிருப்பவை வெறும் 4 தொகுதிகள் மட்டுமே. மேற்கு வங்கத்தில் 8-ல் 3, உ.பி.யில் 14-ல் 1.

இந்தச் சுற்று வாக்குப் பதிவு நடைபெற்ற பெரும்பாலான மாநிலங்களில் கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்தியா கூட்டணி சுத்தம்! எனவே, இந்த முறை வெற்றி பெறுகிற இடங்கள் எல்லாமே லாபக் கணக்குதான்.

கரக்பூரில் வாக்களிக்க நிற்கும் வாக்காளர்கள்...
மக்களவைத் தேர்தல்: காஷ்மீர் டூ கன்னியாகுமரி - திருக்குறள் எக்ஸ்பிரஸில் அலசல்!

ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்களின் போராட்டம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் திட்டம் போன்றவற்றுடன் ஆம் ஆத்மியுடன் அமைந்துள்ள வலுவான கூட்டணியும் சேர ஹரியாணா, தில்லி தொகுதிகளில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிவிட முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற தொகுதிகளில் மீதியுள்ள தொகுதிகள் அனைத்தும் திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி போன்றவற்றிடம் இருக்கின்றன. ஜம்மு – காஷ்மீரில் அனந்தநாக் – ரஜௌரி தொகுதி எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டவொன்று.

மே 25-ல் களம் காண்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்: ஹரியாணாவில் கர்னால் தொகுதியில் பதவி விலகிய முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டர் (பா.ஜ.க.) போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இளைஞரான திவ்யான்சு புத்திராஜா போட்டியிடுகிறார்.

ஜம்மு - காஷ்மீரிலுள்ள அனந்தநாக் – ரஜௌரியில் மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மெஹ்பூபா முப்தியும் ஒடிசாவின் சம்பல்பூரில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உத்தரப் பிரதேசம் சுல்தான்பூரில் பாரதிய ஜனதா சார்பில் மேனகா காந்தியும் போட்டியிடுகின்றனர்.

ஆறாவது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகளுடன் சேர்த்து, மக்களவையின் 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது. இன்னும் ஜூன் 1 ஆம் தேதி கடைசி கட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட, 57 தொகுதிகளுக்கு மட்டும்தான் வாக்குப் பதிவு நடைபெற வேண்டியுள்ளது.

பஞ்சாபிலுள்ள அனைத்து 13 தொகுதிகளுக்கும் உத்தரப் பிரதேசத்தில் மீதியுள்ள 13 தொகுதிகளுக்கும் பிகாரில் 8 தொகுதிகளுக்கும் ஹிமாச்சலில் 4 தொகுதிகளுக்கும் ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகளுக்கும் ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கும் சண்டீகர் ஒரு தொகுதிக்குமாக 57 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற வேண்டியுள்ளது.

வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம்
வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம்

ஆறாம் கட்ட வாக்குப் பதிவு முடிந்தநிலையில் ஏறத்தாழ அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பதை மக்கள் முழுவதுமாகத் தீர்மானித்துவிட்டிருப்பார்கள் எனக் கருதலாம். கடைசிக் கட்டத்துக்காகக் காத்திருப்பவை மிகவும் குறைவான தொகுதிகள் மட்டுமே.

ஜூன் 1-ல் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு முடிந்ததுமே வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கிவிடும். பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com