லிபியாவில் கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் ஆந்திராவை சேர்ந்த டி.கோபாலகிருஷ்ணன், தெலுங்கானாவை சேர்ந்த பல்ராமகிருஷ்ணன் ஆகியோர், லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டனர். இவர்கள் சிர்ட்டே பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர்.
திரிபொலி விமான நிலையத்தில் வைத்த்து அவர்கள் கடத்தப்பட்டனர். இரண்டு பேரையும் மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களை மீட்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


