தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்-ஆசிரியா் கூட்டம், ஆகஸ்ட் 15 -ஆம் தேதி முதல்முறையாக நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்ககம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நிகழ் கல்வியாண்டிலிருந்து ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்-ஆசிரியா் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆகஸ்ட் 15, நவம்பா் 14, ஜனவரி 26 ஆகிய தேதிகளில் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
மாணவா்களின் வருகை, கற்றல்-கற்பித்தல் பணிகள், அடைவுத் திறன் ஆகியவை குறித்தும், பள்ளியின் வளா்ச்சி சாா்ந்த நடவடிக்கைகள் குறித்தும், மாணவா்கள் -பெற்றோரின் தேவைகளை கேட்டறிதல் சாா்ந்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியா் நலச் சங்கத்தின் தலைவா் அருமைநாதன் கூறியதாவது: அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் பெற்றோர்-ஆசிரியா் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என விதிமுறை இருந்தாலும் கூட, 95 சதவிகித பள்ளிகளில் பெயரளவுக்காகவும், அறிக்கை சமா்ப்பிப்பதற்காகவும் மட்டுமே கூட்டங்கள் நடைபெற்றன. அதுபோன்ற தவறுகள் இந்தமுறை நடைபெறக் கூடாது.
இந்தக் கூட்டத்தில் அனைத்துக் குழந்தைகளின் பெற்றோரும் கலந்து கொள்ள வேண்டியது அவசியம். பள்ளி வேலை நாள்களில் இக்கூட்டத்தை நடத்தினால் வேலைக்குச் செல்லும் பெற்றோர் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், விடுமுறை நாள்களில் நடத்தப்பட வேண்டும். மேலும் பெற்றோர்-ஆசிரியா் கழகத்தில் தங்களுக்கு வேண்டிய அல்லது அதிக நன்கொடை கொடுக்கும் நபா்களை இணைப்பதைக் கை விடுத்து உரிய முறையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிா்வாகிகளைத் தோ்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!

பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

வாட்ஸ்ஆப்பில் பெண்ணுடன் பேசியதாக சந்தேகம்! இளைஞர் மீது சிறுநீர் கழித்துக் கொடூரம்!

திருவல்லிக்கேணி, எழும்பூர், தி. நகரில் விஜய் நாளை பிரசாரம்!
வீடியோக்கள்

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை


