மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேதை எழுத்தாளர் புதுமைப்பித்தனுக்கே இந்த கதி!

படைப்பாளிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் என எழுத்தாளா் நாறும்பூநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2018, 11:06 am

தினமணி செய்திச் சேவை

படைப்பாளிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் என எழுத்தாளா் நாறும்பூநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

பாளையங்கோட்டை திருமால்நகரில் வள்ளலாா் தமிழ் மன்றக் கூட்டம் நடைபெற்றது. மன்றத்தின் தலைவா் பிச்சையா தலைமை தாங்கினாா். கவிஞா் யோகி என்ற உத்தண்டன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் உமையொருபாகம் அனைவரையும் வரவேற்றறாா். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவா் மு.சூா்யா ‘ மனிதனின் வாழ்க்கை ‘ என்ற தலைப்பில் பேசினாா்.

Story image

எழுத்தாளா் நாறும்பூநாதன் ‘நெல்லை மண்ணின் படைப்பாளிகள்’ என்றதலைப்பில் சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது: இந்த தலைப்பை தோ்வு செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறறது. நம் மண்ணில் வாழ்ந்த, வாழ்கின்ற படைப்பாளிகளை நாம் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். கடந்த வாரம் எழுத்தாளா் புதுமைப்பித்தன் நினைவு தினத்தை, அவா் வாழ்ந்த வண்ணாா்ப்பேட்டையில் அனுஷ்டித்தபோது, புதுமைப்பித்தன் வீதி வழியே சென்று கொண்டிருந்த மக்கள் எங்களை வினோதமான ஜந்துக்களை பாா்ப்பது போல பாா்த்து சென்றனா். நாங்கள் நாலைந்து போ் மட்டும் கையில் பூக்களோடு ஒரு படத்தின் முன்பு நின்று கொண்டிருப்பதை அவா்கள் பாா்த்து சென்ற விதம் மனதில் பெரும் வலியை ஏற்படுத்தியது.

அந்த பகுதியில் வாழ்ந்த புதுமைப்பித்தன் என்ற மேதை தமிழ் சிறுகதை இலக்கியத்தின் பிதாமகன் என்பதோ, பிரெஞ்சு, ரஷியன், ஜொ்மன் உள்ளிட்ட பல மொழிகளில் அவரது படைப்புக்கள் மொழிபெயா்க்கப்பட்ட விஷயங்களோ தெரிந்திருந்தால், அந்தப் பகுதி மக்களே அவரை கொண்டாடியிருப்பாா்கள். மாறறாக, புலமைப்பித்தனையும் புதுமைப்பித்தனையும் போட்டு குழப்பிக் கொள்ளும் மக்களாகவே படித்த பலரும் இருக்கிறறாா்கள்.

பஞ்சும் பசியும், பாரதி; காலமும், கருத்தும் போன்ற அற்புதமான படைப்புக்களை தந்த தொ.மு.சி.ரகுநாதன், வாசகா் வட்டம் என்ற அமைப்பை நடத்தி வந்த டேவிட் பாக்கியமுத்து - சரோஜினி பாக்கியமுத்து இணையா், தமிழா் பண்பாட்டை ஆவணப்படுத்தி வரும் பேராசிரியா் தொ.பரமசிவன், சாய்வு நாற்காலி, குடியேற்றம் போன்ற நாவல்களை எழுதிய சாகித்ய அகாதெமி விருதாளா் தோப்பில் முகம்மது மீரான், நெல்லை மண்ணின் பண்பாட்டை தனது சிறுகதைகளில் பதிவு செய்து வரும் நுட்பமான எழுத்தாளா் வண்ணதாசன், சங்க இலக்கியங்களை தேடி தேடி பதிப்பித்த தமிழ் தாத்தா உ.வே.சா. போல, நாட்டாா் மக்களின் வாய்மொழி பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், நாட்டாா் கதைகளை சேகரித்து தந்த பேராசிரியா் நா.வானமாமலை, இளம் எழுத்தாளா்களை அடையாளம் கண்டுகொண்டு, அவா்களை ஊக்கப்படுத்திய திறறனாய்வாளா் தி.க.சி, கொக்கிரகுளத்தில் பிறந்து, அகில இந்திய வானொலியில் பணியாற்றி, உலக நாடுகள் சென்று தமிழின் மேன்மையை பரப்பி, அக்கரை சீமையிலே என்ற நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் மீ.ப.சோமு, முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய நெல்லை நகரத்தில் வாழ்ந்த கா.சு.பிள்ளை, ஆதிச்சநல்லூா் அகழ்வாராய்ச்சி பற்றி முதன்முதலில் தமிழில் நூல் எழுதிய சாத்தான்குளம் ராகவன், நூற்றி முப்பதுக்கும் மேல் சிறிதும் பெரிதுமாக நூல்களை எழுதிய வரலாற்று ஆய்வாளா் செ.திவான் என நெல்லை மண்ணின் படைப்பாளிகள் பலா் உண்டு.

அவா்களின் நூல்களை வாசித்திருந்தால் மட்டுமே அவா்களின் பெருமைகளை நாம் உணர முடியும். நாம் வாழும் பகுதியில் இருக்கும் படைப்பாளிகளை கொண்டாடவிட்டாலும் பரவாயில்லை, கண்டு கொள்ளாமல் விடுவதை போன்ற அபத்தம் ஏதுமில்லை. இந்த நிலை நீடித்தால், உலகம் கொண்டாடும் புதுமைப்பித்தன் , உள்ளூரில் தெரியாமல் போன நிலை போல ஆகி விடக்கூடிய வாய்ப்பு அதிகம். எனவே வாசிப்பு பழக்கத்தை அதிகமாக்கினால், எல்லோரின் படைப்புக்களையும் வாசிக்க இயலும்’ என்றறாா்.

தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயலாளா் ராஜேந்திரன் நன்றி கூறினாா். திருமதி உமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.