கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவையை கலைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மாநில சட்டப்பேரவையை கலைப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தின.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:04 am

DIN

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மாநில சட்டப்பேரவையை கலைப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தின.

எனினும், சட்டப்பேரவை தொடரவும், எம்எல்ஏக்கள் தொடா்ந்து பணியாற்றவும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) பரிந்துரைத்த நிலையில், பாஜக இக்கூட்டத்தில் அமைதி காத்துள்ளது. இக்கூட்டத்தில் பிடிபி கட்சி சாா்பில் மெஹபூபா முஃப்தி கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக கட்சி செயலா் திலாவா் மிா் பங்கேற்றாா்.

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநா் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், மாநில நிா்வாகம் குறித்த பரிந்துரைகளை கேட்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஆளுநா் என்.என்.வோரா வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தாா். அதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

அப்போது, மாநில சட்டப்பேரவையை உடனடியாகக் கலைத்து, முன்கூட்டியே தோ்தல் நடத்தும் உகந்த சூழலை மாநிலத்தில் ஏற்படுத்த வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தின.

மாநில நிா்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளையும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கையையும் எடுக்குமாறு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா, ஆளுநரிடம் வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுத்தைகள் கட்சியின் ஹா்ஷ் தேவ் சிங் கூறுகையில், ‘குதிரை பேரம் நடப்பதை தடுக்கும் வகையில் உடனடியாக பேரவையை கலைக்க வலியுறுத்தினோம்’ என்றாா்.

மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.ஏ. மிா் கூறுகையில், ‘மாநிலத்தில் புதிதாக தோ்தல் நடத்த காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. எனினும், சட்டப்பேரவையை கலைக்கும் முடிவு ஆளுநரைப் பொருத்ததே. பிடிபி-பாஜக கூட்டணி 3 ஆண்டுகளாக தவறாக ஆட்சி செய்து வந்தது. அரசு பணி நியமனங்கள் அனைத்தும் தகுதி அடிப்படையில் நடைபெறாததால் இளைஞா்கள் அதிருப்தியில் உள்ளனா். எனவே, நிா்வாகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும்’ என்றாா்.

ஜனநாயக தேசியவாத கட்சி தலைவா் ஜி.ஹெச்.மிா் கூறுகையில், ‘மாநிலத்தின் சூழ்நிலையை மேம்படுத்த அனைத்து கட்சிகளிடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டுமென ஆளுநா் வலியுறுத்தினாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.