தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அந்நிய முதலீடுகளுக்குப் புதிய நிபந்தனை: இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு

அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பாக இந்தியா புதிதாக விதித்துள்ள வரன்முறைகள், உலக வர்த்தக அமைப்பின் பாகுபாடின்மைக் கொள்கையை மீறுவதாகும் என்று சீனா தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 10:01 am

அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பாக இந்தியா புதிதாக விதித்துள்ள வரன்முறைகள், உலக வர்த்தக அமைப்பின் பாகுபாடின்மைக் கொள்கையை மீறுவதாகும் என்று சீனா தெரிவித்துள்ளது.

சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு எதிராக இந்தியா விதித்துள்ள கூடுதலான நிபந்தனைகள், பொதுவான தாராளமயப் போக்கிற்கும் வர்த்தக, முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிரானது என்றும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் முக்கியமாக இவை, ஜி20 நாடுகளின் தலைவர்கள், வர்த்தக அமைச்சர்களால் திட்டமிடப்பட்ட தாராள, நியாயமான, பாகுபாடற்ற, வெளிப்படையான வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சூழல், திறந்த சந்தை ஆகியவற்றுக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் அறிக்கையொன்றில்  தில்லியிலுள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளை இந்தியா திரும்பப் பெறும் என்றும் அனைத்து நாடுகளின் முதலீடுகளையும் ஒருமாதிரியாகக் கருதும் என்றும்  தூதரகம் தெரிவித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.