ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரிட்டன் வரும் அனைவரும் 14 நாள்கள் தனித்திருத்தல் கட்டாயம்

வெளிநாடுகளிலிருந்து பிரிட்டன் விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகள் அனைவரும் 14 நாள்கள் தனித்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 3:57 pm

DIN

வெளிநாடுகளிலிருந்து பிரிட்டன் விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகள் அனைவரும் 14 நாள்கள் தனித்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கிலான இரண்டாம் கட்ட முடக்கத் திட்டத்தில் இதுபோன்ற வேறு பல நடவடிக்கைகளையும் எடுக்க பிரிட்டிஷ் அரசு சிந்தித்து வருகிறது.

உலகின்  பல நாடுகள் மக்களை முடக்கும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பிற நாட்டுப் பயணங்களை அனுமதிக்கவுள்ள நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள்  யாவும் மே மாதத் தொடக்கத்தில் நடைமுறைக்கு வருகின்றன.

இந்தக் கட்டுப்பாடுகள் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிரிட்டனுக்கு வரும் மற்ற அனைவருக்கும் பொருந்தும்.

தங்கள் உடல் நலம் சீராக இருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் சான்றுறுதியுடன் எங்கே தனித்திருக்கப் போகிறார்கள் என்பதையும் பயணிகள் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட முகவரியில் அவர்கள் தங்காவிட்டால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.

தங்கள் நாடுகளுக்கு வருவோர் கட்டாயம் 14 நாள்கள் தனித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை ஏற்கெனவே, ஜப்பான், ஹாங்காங், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியு சிலாந்து, கிரீஸ் ஆகிய நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன.

பிரிட்டிஷ் விமான நிலையங்களில் ஒவ்வொரு நாளும் 15 ஆயிரத்துக்கும்  அதிகமானோர், கரோனா தொற்றுக்கான எவ்வித சோதனையுமின்றி வந்திறங்குகிறார்கள்.

கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகுகூட ஆயிரக்கணக்கானோர், இத்தாலி, ஸ்பெயின் போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பிரிட்டனுக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள்.

மிக மோசமான அளவுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கு மக்களைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது பிரிட்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.