மகாராஷ்டிரத்தில் புதிதாக 137 காவலர்களுக்கு கரோனா: 2 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 137 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 காவலர்கள் உயிரிழந்தனர்.


மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 137 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 காவலர்கள் உயிரிழந்தனர்.
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கரோனாவிற்கு முன்கள பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் புதிதாக 137 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 137 காவலர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதால், கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 10,163-ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்புகளில் 8,189 காவலர்கள் தொற்றில் இருந்து குணமடைந்தனர். 1,865 காவலர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் 1,46,268 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 16,476 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,05,521 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...