கர்நாடகத்தில் நடமாடும் கரோனா பரிசோதனை மையம் துவக்கி வைப்பு
கர்நாடகத்தில் முதன்முறையாக நடமாடும் கரோனா பரிசோதனை மையம் துவங்கப்பட்டுள்ளது.


பெங்களூரு: கர்நாடகத்தில் முதன்முறையாக நடமாடும் கரோனா பரிசோதனை மையம் துவங்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஒப்புதல் பெற்ற நடமாடும் கரோனா பரிசோதனை மையத்தை கர்நாடகத்தின் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தொடக்கி வைத்தார்.
கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகளும் அதிகரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக கர்நாடகத்தில் முதன்முறையாக நடமாடும் கரோனா பரிசோதனை மையத்தினை மருத்துவத்துறை அமைச்சர் சுதாகர் திறந்து வைத்தார். இதன்மூலம் ஒரு நாளுக்கு 400 கரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என்றும், 4 மணிநேரத்தில் தொற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய (வியாழக்கிழமை) நிலவரப்படி கர்நாடகத்தில் 73,966 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,804 பேர் தொற்றால் உயிரிழந்த நிலையில், 74,679 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கர்நாடகத்தில் 15,32,654 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...