ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பிரிட்டனிலிருந்து குஜராத், பஞ்சாப் வந்த 12 பேருக்கு கரோனா

பிரிட்டனில் இருந்து குஜராத், பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த 11 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :22 டிசம்பர் 2020, 3:22 pm

பிரிட்டனில் இருந்து குஜராத், பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த 11 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து அமிருதசரஸ் விமான நிலையத்திற்கு 250 பயணிகள், 22 ஊழியர்களுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 7 பயணிகளுக்கு, ஒரு ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஆமதாபாதிற்கு இன்று காலை 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த 275 பயணிகளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் மரபனுவைக் கண்டறிய புணேவில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அவர்களின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன், தில்லிக்கு வந்த 5 பேருக்கு, கொல்கத்தாவிற்கு வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா - பிரிட்டன் இடையே இன்று நள்ளிரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை தற்காலிகமாக விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.