விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு காளை இறப்பு: சோகத்தில் ஆழ்ந்த ஊர்மக்கள்

விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு காளை உடல்நிலை சரியில்லாமல் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை
உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை

விராலிமலை: விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு காளை உடல்நிலை சரியில்லாமல் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

விராலிமலை அருகே உள்ள ராப்பூசல் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 26). இவர் ஐந்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து பரமரித்து வருகிறார். 

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தான் வளர்த்து வரும் காளைகளை அழைத்து சென்று வாடிவாசலில் அடைப்பது வழக்கம். 

இந்நிலையில் குமார் வளர்த்த வந்த சின்னா என்று பெயரிடப்பட்ட ஜல்லிக்கட்டு மாடு கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தது.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஜல்லலிக்கட்டு காளை இறந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து அனைவரும் மனிதன் இறப்புக்கு வருவது போல பூ மாலை, வேட்டி, துண்டு என கொண்டு வந்து கோடி எடுத்து, மாட்டிற்கு மஞ்சள் தடவிய வேட்டியை போத்தினர். பெண்கள் கதறி அழுதனர்.

பின்னர் குமாருக்கு சொந்தமான தோட்டத்தில் காளையை அடக்கம் செய்தனர். இதனால் அந்த பகுதியல் சோகமாக காணப்பட்டது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com