எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

மினியாபொலிஸில் காவல்துறையே ஒழிக்கப்படுகிறது: பாதுகாப்புக்கு மக்கள் அமைப்பு

மினியாபொலிஸ் மாநகரில் காவல்துறையையே ஒழித்துக்கட்டிவிட்டு மக்களே நடத்தும் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்துவதென மினியாபொலிஸ் நகர் கவுன்சில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

Updated On :

மினியாபொலிஸ் மாநகரில் காவல்துறையையே ஒழித்துக்கட்டிவிட்டு மக்களே நடத்தும் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்துவதென மினியாபொலிஸ் நகர் கவுன்சில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

மினியாபொலிஸ் நகரில்தான் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட், வெள்ளையரான காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்திக் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் எவ்விதப் பலனுமில்லை என்பதை ஃபிளாய்ட் கொலை என்ற பெருந்துயரம் அம்பலப்படுத்தியுள்ளது என்றும் கவுன்சில் தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

"காவல்துறை இல்லாமலேயே மக்களை, சமுதாயத்தை எவ்வாறு பத்திரமாகக் காப்பது என்பதற்கான பத்து அம்சத் திட்டத்தின் தொடக்கத்தை இப்போது எழுதத் தொடங்குவோம். ஏனெனில், காவல்துறை தோற்றுப் போய்விட்டது" என்று கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவரான ஜெர்மையா எல்லிசன் தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கான நிதி பிற தேவைகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் காவல்துறையை  அகற்றுவது பற்றி கவுன்சிலில் முடிவு செய்யப்படும் என்று கவுன்சில் தலைவர் லிசா பென்டர்  அறிவித்த ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் புதிய வகையிலான பாதுகாப்பு அமைப்பு வரும் ஆண்டில் உருவாக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.