பெருவாகோட்டையில் கரோனா பரவல்: அரசு மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை
திருவாடானை அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடை முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவாடானை அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடை முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாடானை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் கரோனா தொற்றுண்ணீ அதிகரித்து வரும் நிலையில் இன்று பாண்டுகுடியில் கரோனா தொற்றுண்ணீ சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார்.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வர்த்தக நிறுவனங்கள் உணவகங்கள் மூடியுள்ள நிலையில் அரசு மதுபானக்கடை மட்டும் திறந்திருப்பதை மூடக்கோரி சனிக்கிழமை பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி கடைப்பிடித்து அரசு மதுபான கடை முன்பாக அமர்ந்து போராட்டம் நடைபெற்றது.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...