8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நாமக்கல் அருகே கல் குவாரி வெடியில் சிறுமி பலி

நாமக்கல் அருகே கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைத்த வெடியால் புதன்கிழமை மாலை 10 வயதுச் சிறுமி உயிரிழந்தார்.

Published On :27 ஜனவரி 2024, 10:12 pm IST

நாமக்கல்: நாமக்கல் அருகே கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைத்த வெடியால் புதன்கிழமை மாலை 10 வயதுச் சிறுமி உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திபுரத்தைச் சேர்ந்த கௌசிக் பிரபு என்பவருக்கு சொந்தமான கல் குவாரி, கொண்டமநாயக்கன்பட்டியில் இருக்கிறது.

இங்கு வையப்பமலையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தனது மனைவி, மகன், மகளுடன் குடிசை வீட்டில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். புதன்கிழமை மாலை 6 மணியளவில் மூர்த்தி தனது மனைவியுடன் பொருள்கள் வாங்க வெளியே சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் அவரது மகள் நந்தினி (10), மகன் சௌந்தரராஜன் (5) இருவரும் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது கல் குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைக்கப்பட்டது.

இந்த வெடி வெடித்ததில் பெரிய பாறை ஒன்று பறந்து வந்து விளையாடிக்கொண்டிருந்த இருவர் மீதும் விழுந்தது. இதில் சிறுமி நந்தினி தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் சௌந்தரராஜன் கை,  கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சேந்தமங்கலம் வட்டாட்சியர் ஜானகி, காவல் ஆய்வாளர் சுபாஷ் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் விரைந்து வந்தனர்.

இதில் காயமடைந்த சௌந்தரராஜனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சேந்தமங்கலம் காவல்துறையினர், கல் குவாரி உரிமையாளர் கௌசிக் பிரபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரி வெடி விபத்தில் சிறுமி உயிரிழந்தது இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.