வங்கதேசத்தில் ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் குல்னா மாவட்டத்தில் 4 ஹிந்து கோயில்கள் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஷியாலி பகுதியில் வசித்து வந்த ஹிந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.
இதில் ஒருதரப்பினர் ஷியாலி பகுதியில் இருந்த கோயில் மீது தாக்குதல் நடத்தி சிலைகளை சேதப்படுத்தியதாக தாக்கா டர்பைன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஷியாலி புர்பாரா பகுதியில் இருந்த ஹரி மற்றும் துர்கா கோயில்களையும் சேதப்படுத்தியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் ஒருசில கடைகள் மற்றும் இரு வீடுகளும் சேதப்படுத்தப்பட்டதாக தாக்கா டர்பைன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மோதலில் 4 கோயில்களில் 10 சிலைகள் சேதப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

