தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று (கோப்புப்படம்)

Updated On :4 ஜூன் 2021, 10:50 am

DIN

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பசியின்மை மற்றும் சளித் தொந்தரவு இருந்ததைத் தொடர்ந்து அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. 

உயிரியல் பூங்காவில் அவை நெருக்கமாக வசிப்பதால் அவற்றுக்கிடையே கரோனா பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதற்கு முன்பு ஸ்பெயினின் பாா்சிலோனா, அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இதற்குமுன் தெலங்கானா, ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காக்களின் சிங்கங்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.