எல்ஈடி டிவியில் கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
சென்னை விமான நிலையத்திற்கு எல்ஈடி டிவியில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.57 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


சென்னை விமான நிலையத்திற்கு எல்ஈடி டிவியில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.57 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபையிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக ஹைதராபாத் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் துபையிலிருந்து வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ரூ.57 லட்சம் மதிப்பிலான 1.27 கி.கி. தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது.
எல்ஈடி டிவியில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...